Nagaratharonline.com
 
வெளிநாட்டிற்கு செல்லும் ஆத்தங்குடி "டைல்ஸ்'  Jul 1, 11
 
ஆத்தங்குடியில் தயாராகும் பூக்கல் "டைல்ஸ்' சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆத்தங்குடியில் 35க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடிசை தொழிலாக பூக்கல் (டைல்ஸ்) தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. 8க்கு 8, 10க்கு 10 என மூன்று அளவில் பலவித "டிசைன்களில்' தயாராகும் பூக்கல் மதுரை, கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு தினமும் அனுப்பப்படுகிறது. தவிர, சிங்கப்பூர், மலேசியா, மியான்மர், இலங்கை போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இக்கல்லின் மகத்துவம் உணர்ந்து பூக்கல்லை வாங்கி செல்கின்றனர்.

தற்போது, கோடை முடிந்தும் வெயில் கொளுத்தி வருவதால் இந்த கல்லிற்கு மவுசு சற்று அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வால் தற்போது வீடுகட்டும் சாதாரண மக்களால் "டைல்ஸ்' கற்களை வாங்கி பதிப்பது என்பது இயலாத காரியம். இதனால், குறைந்த விலையில் நீண்ட உழைப்பு தரக்கூடிய ஆத்தங்குடி பூக்கல்லை வாங்கிச் செல்கின்றனர்.

source : Dinamalar