|
மதுரை - சென்னை துரந்தோ ரயில் - பயண நேரம் & கட்டணம் அதிகம் Jul 1, 11 |
|
மதுரை மக்களுக்கு பெரும் வாய்ப்பாக கருதப்படும், துரந்தோ வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம், கூடுதலாக இருப்பதால், கட்டணமும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.இந்த ரயில் மதுரையில் இருந்து செவ்வாய் மற்றும் வியாழன் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்கிறது. சென்னையில் இருந்து திங்கள் மற்றும் புதன் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7 மணிக்கு மதுரை வருகிறது.
.
இந்த ரயில் திண்டுக்கல், கரூர், ஈரோடு மார்க்கமாக செல்லும். சென்னையில் எழும்பூர் ஸ்டேஷனுக்கு பதில் சென்ட்ரல் ஸ்டேஷனில் இருந்து இயக்கப்படுகிறது. பயண தூரம் 698 கி.மீ., பயண நேரம் 8 மணி முப்பது நிமிடம். மதுரையில் இருந்து எழும்பூர் வரை திருச்சி, விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்களின் பயண தூரம் 497 கி.மீ.,. (பயண நேரம் பாண்டியன் எக்ஸ்பிரஸ்- 8 மணி 50 நிமிடம்). எனவே துரந்தோ எக்ஸ்பிரஸ் பயண நேரத்தில், பயணிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு பயன் இல்லை.
source : Dinamalar |
|
|
|
|
|