|
திறப்பு விழா கண்டும் செயல்படாத பாகனேரி அரசு ஆஸ்பத்திரி Jul 6, 11 |
|
பாகனேரி அரசு மருத்துவமனை ரூ.54 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்டு கடந்த ஜனவரி 5ம்தேதி முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலினால் திறக்கப்பட்டது. இங்கு ஸ்கேன், இ.சி.ஜி., குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷன் செய்ய என அனைத்து வசதிகளும் உள்ளன. இப்பகுதி மக்கள் சிவகங்கை,திருப்பத்தூர், காரைக்குடிக்கு இரவில் சிகிச்சைக்காக செல்ல வேண்டிய அவலத்தை போக்க கட்டப்பட்ட இந்த மருத்துவமனை திறப்பு விழா நடந்து பல மாதங்களாகியும் பூட்டியே கிடக்கிறது.
இங்கு வைக்கப்பட்டுள்ள பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களும் பயனற்று காணப்படுகிறது.ஏற்கனவே செயல் பட்டு வரும் மருத்துவமனையிலும் டாக்டர் பணியிடம் காலியாக உள்ளதால் முற்றிலும் மருத்துவமனை செயலிழந்து காணப்படுகிறது. துப்புரவு பணியாளர்,அலுவலக உதவியாளர் பணியிடமும் காலியாக உள்ளதால் மக்கள் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.இந்த மருத்துவமனை செயல்பட்டால் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெறுவர். திறப்பு விழா நடைபெற்ற இம் மருத்துவமனை செயல்பட மருத்துவத்துறை,மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
source : Dinamalar |
|
|
|
|
|