Nagaratharonline.com
 
வைரவன்பட்டி வைரவர் கோயிலில் ஐம்பொன் சிலைகளை திருட முயன்றவர் கைது  Jul 8, 11
 
திருப்புத்தூர் அருகே வைரவன்பட்டியிலுள்ள வைரவர் கோயிலில் திருட முயன்ற வாலிபரை பிடித்து கோயில் மேலாளர் முத்துக்கருப்பன் குன்றக்குடி போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், "" சிதம்பரம், வடக்கு மாங்குடியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் வாசுதேவன் (30) என்றும், கோயிலில் உண்டியல் மற்றும் ஐம்பொன் சிலைகளை திருடுவதற்காக கோயில் மேல் தளத்தில் நான்கு நாட்கள் தங்கியிருந்ததாகவும் அவர் ஒப்புக் கொண்டார். இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான, சூர்யகுமாரிடமிருந்து 12 பவுன் நகைகள், ஒரு டூ வீலர் பறிமுதல் செய்யப்பட்டது.

டி.எஸ்.பி., மங்களேஸ்வரன் கூறுகையில், ""கைதான வாசுதேவன், கோயிலில் திருடுவதற்காக திருப்புத்தூரில் டார்ச், டெஸ்டர், ஆக்ஸாபிளேடு உள்ளிட்ட உபகரணங்களை வாங்கியுள்ளார். ஒரு வாரமாக கோயில் மேல் தளத்தில் தங்கியிருந்து இரவு நேரங்களில் மடப்பள்ளி ஜன்னல் கம்பியை கொஞ்சம், கொஞ்சமாக அறுத்துள்ளார். இயற்கை உபாதையையும் இருந்த இடத்திலேயே கழித்துள்ளார். ஒரு வாரத்திற்கு தேவையான உணவு பொருட்களை (பிஸ்கட், தண்ணீர் பாக்கெட்) முன்னதாகவே வாங்கி வைத்துள்ளார். உண்டியல் திறப்பின் மூலம் 2.30 லட்ச ரூபாய் வரை கோயிலுக்கு வருமானம் கிடைக்கும். அதேபோன்று, 23 ஐம்பொன் சிலைகள் கோயிலுக்குள் இருந்துள்ளன. ஓரிரு நாட்கள் தாமதம் செய்திருந்தால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்துக்கள் திருடு நடந்திருக்க வாய்ப்பு உள்ளது. குறித்த நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் திருட்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

source : Dinamalar