|
ஜூலை 10 சொக்கலிங்கம் புதூர் கோயில் கும்பாபிஷேகம் Jul 8, 11 |
|
சொக்கலிங்கம்புதூர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் நகரச் சிவன் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 10) நடைபெற உள்ளது.
இக் கோயிலில் மூலக் கோபுரம், ராஜகோபுரம் மற்றும் பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஆலயங்களின் திருப்பணிகள் நடைபெற்று, வர்ணம் தீட்டப்பட்டு பணிகள் நிறைவுற்றன. மீனாட்சி சுந்தரேசுவரர், ஸ்ரீ கல்யாண சுந்தரராஜப் பெருமாள், பரிவாரத் தெய்வங்களுக்கும் மற்றும் சுந்தர விநாயகர், வீர விநாயகர், சித்தி விநாயகர், சிதம்பர விநாயகர், காமன்ராஜா ஆகிய ஆலயங்களுக்கும் 10.7.2011 காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.
விழாவையொட்டி, வியாழக்கிழமை (ஜூலை 7) காலையில் அனுக்ஞை, விநாயகர் பூஜை, கணபதி ஹோமமும், மாலையில் முதல் கால யாக பூஜையும் தொடங்குகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு 6-ம் கால யாகபூஜை நிறைவுற்று, 8.45 மணிக்கு கடம் புறப்பாடும், அதைத் தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது.
கோவிலூர் ஆதீனம் நாச்சியப்ப ஞானதேசிக சுவாமிகள், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பாதரக்குடி ஆதீனம் ஸ்ரீ ரவீந்திர சுவாமிகள், துலாவூர் ஆதீனம் ஞானப் பிரகாச தேசிக சுவாமிகள், தலைவர் ரவீ வீரப்பன் உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற் கின்றனர்.
விழாவையொட்டி, காலை 11 மணிக்கு கும்பாபிஷேக விழா வாழ்த்தரங்கம் நடை பெறுகிறது. இதில் இந்திய சட்டத் துறை ஆணைய முன்னாள் தலைவர் டாக்டர் ஏஆர். லெட்சுமணன் தலைமை வகிக்கிறார்.
மதுரை தியாகராஜர் மில்ஸ் நிர்வாக இயக்குநர் கருமுத்து தி. கண்ணன் முன்னிலை வகிக்கிறார். ஆதீனத் தலைவர்கள் வாழ்த்திப் பேசுகின்றனர்.
source : Dinamani |
|
|
|
|
|