Nagaratharonline.com
 
காரைக்குடி: தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் 2009' காரைக்குடியில் இன்று: சிவகங்கையில் நாளை  Nov 14, 09
 
தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் 2009' காரைக்குடியில் இன்று: சிவகங்கையில் நாளை


காரைக்குடி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக டி.வி.ஆர்., அகாடமி வழங்கும் "தினமலர் ஜெயித்துக்காட்டுவோம் 2009' நிகழ்ச்சி காரைக்குடியில் இன்று, சிவகங்கையில் நாளை நடக்கிறது.காரைக்குடி செக்காலை ரோடு சுபலட்சுமி மகால், சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்.எம்.ஆர்., மகாலில் நடக்கும் இந்நிகழ்ச்சியை சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து வழங்குகிறது.தேர்வை எளிதான முறையில் எதிர்கொள்வது குறித்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9 முதல் 10.30 மணி வரையிலும், மெட்ரிக்., மாணவர்களுக்கு காலை 10.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரையிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரையிலும் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களால் ஆலோசனை வழங்கப்படும்.காரைக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் தேவகோட்டை, திருப்புத்தூர், சிங்கம்புணரி, கல்லல், எஸ்.எஸ்.கோட்டை, புதுவயல் பகுதி மாணவர், பெற்றோர் பங்கேற்கலாம்.
மாதிரி வினா விடை புத்தகம்: முதலில் வரும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 1,000 பேர், மெட்ரிக்., மாணவர்கள் 750 பேருக்கு மாதிரி வினா புத்தகம் வழங்கப்படும். முதலில் வரும் பிளஸ் 2 மாணவர்கள் 750 பேருக்கு மாதிரி வினா, உடம்பும் மனசும் நல்லா இருக்கனும் என்ற புத்தகங்கள் வழங்கப்படும்.

இணைந்து வழங்குவோர்: இந்நிகழ்ச்சியை அண்ணா கார்டன், மாதா எலக்ட்ரிக்கல்ஸ், இதயம் பைப்ஸ், ஜெ.கே.ரியல் எஸ்டேட், அழகப்பா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, திருப்புத்தூர் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி, காரைக்குடி தங்கமயில் ஜூவல்லர்ஸ், அப்துல்லா மிஷன் மருத்துவமனை இணைந்து வழங்குகின்றனர்.

சிவகங்கை: சிவகங்கை ஆர்.எம்.ஆர்., மகாலில் நாளை இந்நிகழ்ச்சி நடக்கிறது.மதகுபட்டி, பாகனேரி, மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதி மாணவர், பெற்றோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு: சோழபுரம் சுத்தானந்தபாரதி தேசிய வித்யாலயம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். கண்ணப்பன் (அறிவியல்), பாகனேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.உஷா (ஆங்கிலம்), சிவகங்கை புனித ஜஸ்டின் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜி.மரிய வனஜா (கணிதம்) ஆலோசனை வழங்குவர்.

மெட்ரிக்.,: திருப்புவனம் வேலம்மாள் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஏ.நிமலன் (அறிவியல்-1), சிவகங்கை புனித ஜஸ்டின் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஜி.முத்துச்செல்வி (அறிவியல்-2), கே.ராமலட்சுமி (ஆங்கிலம்), சிவகங்கை ஆக்ஸ்வர்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கே.வீரபாண்டி (கணிதம்)ஆலோசனை வழங்குவர்.
பிளஸ் 2: ராஜகம்பீரம் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜி.சூசைரெக்ஸ் (ஆங்கிலம்), சிவகங்கை 21 ம் நூற்றாண்டு மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எம்.எம்.அருள்சேகர் (இயற்பியல்), சண்முகநாதபட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.ஜெயச்சந்திரன் (வேதியியல்), சிவகங்கை சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஜே.கருணாகரன் (விலங்கியல்), திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் என்.செந்தில்குமார் (தாவரவியல்), சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் என்.சுந்தரராஜன் (கணிதம்) ஆலோசனை வழங்குவர். வினா விடை புத்தகம்: முதலில் வரும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் 1,000 பேர், மெட்ரிக்., மற்றும் பிளஸ் 2 மாணவர் தலா 750 பேருக்கு மாதிரி வினா புத்தகம் வழங்கப்படும்.இணைந்து வழங்குவோர்: இந்நிகழ்ச்சியை காளையார்கோவில் புனித மைக்கேல் கல்வி நிறுவனங்கள், மானாமதுரை மாதா கல்வி நிறுவனங்கள், கீழக்கண்டனி பண்ணை பொறியியல் கல்லூரி, அரசனூர் எஸ்.பிரீத்தி பி.எட்., கல்லூரி மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் இணைந்து வழங்குகின்றனர்.
மாணவர் கவனத்திற்கு: மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் பொதுத்தேர்வை எளிமையாக எதிர்கொள்ள அறிவு வளர்க்கும் தினமலர் இதழ் உங்களை அழைக்கிறது.


Source:Dinamalar 14/11/09