|
காரைக்குடி: மாநில ஓவிய போட்டி மாணவி சாதனை Nov 14, 09 |
|
மாநில ஓவிய போட்டி மாணவி சாதனை
காரைக்குடி: புதுடில்லியில் நடந்த போட்டியில் காரைக்குடி த லீடர்ஸ் பள்ளி மாணவியின் ஓவியம் தேர்வு செய்யப்பட்டது."பவர் கிரிடு கார்ப்பொரேஷன் ஆப் இந்தியா' சார்பில் சக்தி சேமிப்பு- 2009 என்ற மாநில ஓவிய போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.த லீடர்ஸ் மெட்ரிக்., பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவி சகாய ஜெனிபரின் ஓவியம் உட்பட 50 ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டன. இன்று அண்ணா பல்கலையில் நடக்கவுள்ள தேசிய தகுதி சுற்று போட்டியில் பங்கேற்கவுள்ளார். மாணவியை தாளாளர் ராஜமாணிக்கம், முதல்வர் ஜலஜாகுமாரி, ஆசிரியர்கள் பாராட்டினர்.
Source: Dinamalar 14/11/09 |
|
|
|
|
|