|
23 ரூபாயில் திருப்பதி போகலாம் : புதிய ரயில் சேவை துவக்கம் Jul 20, 11 |
|
புதிய ரயில்களின் சேவையை, தெற்கு ரயில்வே நேற்று துவக்கியது. புதிய ரயிலில், சென்னையிலிருந்து 23 ரூபாய் கட்டணத்தில், பக்தர்கள் திருப்பதி செல்ல முடியும். சென்னை சென்ட்ரலில் நடந்த நிகழ்ச்சியில், சென்ட்ரல்-திருப்பதி, சென்னை-நெல்லூர் ரயில்களை, மூத்த பணியாளர் ஒருவர் கொடியசைத்து, துவக்கி வைத்தார். இதில், ரயில்வே அதிகாரிகள், பயணிகள் பங்கேற்றனர்.
ரயில்வே அதிகாரிகள் கூறும்போது,"ஏற்கனவே சப்தகிரி எக்ஸ்பிரஸ் திருப்பதி செல்கிறது. இதற்கு, 65 ரூபாய் கட்டணம். குறித்த ஸ்டேஷன்களில் மட்டுமே நின்று செல்லும். தற்போது விடப்பட்டுள்ள, சென்னை சென்ட்ரல் - திருப்பதி மின்சார ரயிலில், 23 ரூபாய் கட்டணத்தில் திருப்பதி செல்ல முடியும். அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். காலை 7.05க்கு புறப்பட்டு,11.10க்கு திருப்பதி சென்றடையும்' என்றனர். திருப்பதி-சென்னை சென்ட்ரல் (66014) ரயில்களும் நேற்று முதல் இயங்கத் தொடங்கின.
source : Dinamalar |
|
|
|
|
|