|
புதுவயலில் அமெரிக்கவாழ் தமிழர்கள் இலக்கிய விழா Nov 15, 09 |
|
காரைக்குடி, நவ. 15: காரைக்குடி அருகே புதுவயலில் அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் இலக்கிய விழா நடைபெற்றது.
விழாவில் கவிஞர் அரு. சோமசுந்தரன் தலைமை வகித்துப் பேசினார். நியூஜெர்சி வீரப்பன் அமெரிக்க வாழ் தமிழர்களை அறிமுகப்படுத்தியும், விழாவைத்தொடக்கிவைத்தும் பேசினார்.
விழாவில் கவிஞர் அரு. சோமசுந்தரன் எழுதிய சுந்தர காண்டம் என்ற நூலை தொழிலதிபர் ராமசாமி செட்டியார் வெளியிட அதனை நியூயார்க்கைச் சேர்ந்த பழனியப்பன் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
கவிஞர்கள் காரா, தமிழரசி ஆகியோர் கவிதை பாடினர். திருச்சி பேராசிரியர் பழ. முத்தப்பன், சிங்கப்பூர் சாமிநாதன், ஹாங்காங் ராமநாதன் மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் பலரும் பேசினர். கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுப்பு நன்றி கூறினார்.
source : Dinamani 16/11/09 |
|
|
|
|
|