Nagaratharonline.com
 
மழைக்கு ஒதுங்குவதுபோல் நடித்து காரைக்குடி பெண்ணிடம் நகை கொள்ளை  Nov 15, 09
 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நியூடவுன் பகுதியை சேர்ந்தவர் பெரியகருப்பன். அவரது மனைவி காந்தி ஆச்சி. நேற்று காரைக்குடியில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. அப்போது 2 பேர் அங்கு வந்தனர். எட்டி பார்த்த காந்தி ஆச்சி இங்கே நிற்ககூடாது என்று கூறினார்.

உடனே 2 பேரும் மழை நின்றதும் சென்று விடுகிறோம் என்று தெரிவித்தனர். உடனே காந்தி ஆச்சி வீட்டுக்குள் செல்ல முயன்றார். உஷாரான நேரத்தில் மர்ம நபர்கள் திடீரென காந்தி ஆச்சியை தாக்கி அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தலை மறைவானார்கள்.

இது குறித்து குற்ற வியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அருணாசலம் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

source : Maalaimalar 09/11/09