Nagaratharonline.com
 
NEWS REPORT: ராங்கியம் வளத்தி அம்மன் படைப்பு  Aug 4, 11
 
 
29/07/2011அன்று, இளயாற்றாங்குடி கழனிவாசல் பிரிவைச் சார்ந்த, படைப்புக்கு உரிய, ஒன்பது ஊர் நகரத்தார்கள் , இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை படைக்கும் ராங்கியம் வளத்தி அம்மன் படைப்பை வெகு சிறப்பாக நடத்தினார்கள்.

ராங்கியத்தில் வாழும் வயதில் மூத்த தம்பதியினர் விநாயகப்பானையை அதிகாலையில் வைத்து, ராங்கியம் வளத்தி அம்மன் படைப்பை துவக்கினர்.

பின்பு, காலை 5.50 மணி அளவில் முதல் தீபமும், 9.00 மணி அளவில் இரண்டாம் தீபமும் 12.05 மணி அளவில் மூன்றாம் தீபமும் ஏற்றி, அனைவரும் வழிபட்டனர். மதியம் மங்கலப் பொருட்கள் ஏலம் விடப்பட்டு, புள்ளிகளுக்கு காளாஞ்சியும் வழங்கப்பட்டன.மூன்று நாட்களும் சுவையான உணவு பரிமாறப்பட்டது. குழந்தைத் தொட்டில்களும் கட்டி வளத்தி அம்மனை வழிபாடு செய்தனர்.


படைப்பு ஏற்பாடுகளை கண்டவிராயன்பட்டி (சாமியாடி வகையறா),குருவிக்கொண்டன் பட்டி (சமையல்),
ராங்கியம் (பொது நிர்வாகம், கணக்கு), குழிபிறை ( மளிகை ,இதர பொருட்கள்), விராச்சிலை (காளாஞ்சி), பூலாங்குறிச்சி, கொப்பனாபட்டி, வேகுப்பட்டி, வலையபட்டி ( பூசாரி வகையறா) நகரத்தார்கள் சிறப்பாக செய்திருந்தார்கள் .

event submitted by S.Ganapathy, poolankurichi,