|
சிலிண்டர் "டியூப்'பை ஆண்டிற்கு ஒருமுறை மாற்றுவது அவசியம் Aug 7, 11 |
|
""காஸ் சிலிண்டரில் உள்ள "டியூப்'பினை ஆண்டு தோறும் மாற்றுவது அவசியம்,'' என, சிவகங்கை தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் கூறினார்.
தீயணைப்பு நிலைய அலுவலர் பேசுகையில்,"" இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன உத்தரவுபடி, ஆண்டிற்கு ஒரு முறை அவசியம், காஸ் சிலிண்டரில் உள்ள "டியூப்'களை மாற்றவேண்டும். அப்போது தான், விபத்துக்களை தவிர்க்கலாம். காஸ் அடுப்பு பயன்படுத்தும் போது, பெரும்பாலும் காட்டன் சேலை உடுத்தவேண்டும். அதுவும் இருக்கமானதாக இருத்தல் அவசியம். எந்த ஒரு தீவிபத்து, மின் கசிவு, மின் விபத்துகள் நேரிட்டால், தீயணைப்பு நிலையத்தை அணுகி, பெரிய விபத்துக்களை தவிர்க்கவும். சிவகங்கை நிலையத்தை 04575 - 240 301, 240 960, 101 எண்களில் தொடர்பு கொள்ளலாம்,'' என்றார்.
source : dinamalar |
|
|
|
|
|