|
தமிழக அரசு சூப்பர் டீலக்ஸ் பஸ்களுக்கு மூடு விழா: Aug 8, 11 |
|
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில், உதிரிபாகங்கள் பற்றாக்குறையால், சூப்பர் டீலக்ஸ் பஸ்களுக்கு மூடு விழா நடத்தப்பட்டு வருகிறது. இதனால், வழித்தடங்களில் அல்ட்ரா டீலக்ஸ், ஏ.சி., பஸ்கள் இயக்கப்பட்டு, கட்டண கொள்ளை நடத்தப்படுகிறது. இந்த கட்டண கொள்ளையால் பயணிகளின் பர்ஸ் காலி ஆவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2007ம் ஆண்டில், 520 அல்ட்ரா டீலக்ஸ்பஸ்கள் வழங்கப்பட்டன. இந்த பஸ்களில், 200க்கும் மேற்பட்ட பஸ்கள், உதிரிபாகங்கள், டயர் இல்லாததால் கிளை டெப்போக்களில் ஓரங்கட்டப்பட்டு உள்ளன.
source : Dinamalar |
|
|
|
|
|