Nagaratharonline.com
 
வெங்கடாஜலபதியை அருகில் தரிசிக்கும் திட்டம் : பக்தர்களிடம் வரவேற்பு  Aug 12, 11
 
திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், மூலவரை அருகில் இருந்தபடி தரிசனம் செய்யும் ஏற்பாட்டின் மூலம், செல்வாய், புதன் ஆகிய இரு நாட்களில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருமலை கோவிலில் வார நாட்களில் செவ்வாய், புதன்கிழமைகளில் வெங்கடேச பெருமாளை, 30 அடி தூரத்திலிருந்து தரிசிக்கும் புதிய நடைமுறையை, திருப்பதி தேவஸ்தானம் கடந்த ஆண்டு அமல்படுத்தியது. மூலவரை அருகில் இருந்து தரிசிக்கும் இந்த வசதிக்கு, இலவச கியூ, பாதயாத்திரை, 50 ரூபாய் சிறப்பு தரிசனம் மற்றும் 300 ரூபாய் சிறப்பு நுழைவு கட்டண பக்தர்களிடம் தொடர்ந்து பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வார நாட்களில் சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். மற்ற தினங்களில் குறைந்த அளவிலான பக்தர்கள் திருமலைக்கு வருவதால், செவ்வாய், புதன் கிழமைகளில் வரும் பக்தர்கள், மூலவரை அருகில் இருந்தபடி தரிசனம் செய்யும் புதிய நடைமுறையை தேவஸ்தான நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.

source : Dinamalar