Nagaratharonline.com
 
How to get Voter ID  Nov 16, 09
 
வாக்காளர் என்ற முறையில் வாக்காளர் அடையாள அட்டை பெற உங்களது பெயர், நீங்கள் வசிக்கும் சட்டசபைத் தொகுதிக் குரிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

உங்களது பெயரை முதல் முறையாக வாக்காளர் பட்டிய லில் இடம்பெறச்செய்ய வேண்டு மானால், உங்களுக்கு அந்த ஆண்டின் ஜனவரி முதல் தேதி பதினெட்டு வயது பூர்த்தியாகி இருக்கவேண்டும். அதா வது ஒருவருக்கு ஜூன் மாதம் பதினெட்டு வயது பூர்த்தியாகிறதென் றால், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதிதான் வாக்காளர் பட்டியலில் விண்ணப் பிக்க முடியும்.

உங்கள் பகுதிக்குரிய வாக்கா ளர் பட்டியல் பதிவு அதிகாரி யிடம் அதற்குரிய படிவம் வாங்கி, `படிவம் - 6' பூர்த்தி செய்து, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஒட்டி, சமர்ப்பிக்க வேண்டும். உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் ஏற் கெனவே இடம்பெற்று அந்த முகவரியிலிருந்து நீங்கள் வேறு இடத்துக்கு மாறியிருந்தால், பழைய என்ட்ரியை நீக்கி விட்டு, இப்போது வசிக்கும் புதிய முகவரியை வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும். அதற்கும் படிவம் 6 தான் பயன்படுத்தவேண்டும்.

விண்ணப்பத்தில் இடம்பெற்றுள்ள புகைப்படம் மற்றும் அனைத்து தகவல் களையும் உறுதிப்படுத்துவதற்காக பாஸ் போர்ட், டிரைவிங் லைசென்ஸ், துப்பாக்கி லைசென்ஸ் போன்று ஏதாவது ஒன்றின் நகல் பிரதியை இணைக்கவும். தகவல் களை சரிபார்க்க அதிகாரிகள் உங்கள் வீட்டுக்கு வரும்போது, நீங்கள் இணைத் துள்ள ஆதாரத்தின் அசலைக் காட்ட வேண்டும்.

இவை எதுவும் இல்லாதுபோனாலும், அதிகாரிகள் தகவல்களைச் சரிபார்க்க வரும் போது நேரடி விசாரணை மூலம் உறுதி படுத்திக் கொண்டு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயரைச் சேர்ப்பார்கள். அதே நேரத்தில் ஏற்கெனவே வசித்த பகுதிக்குரிய வாக்காளர் பட்டியலிலிருந்து உங்கள் பெயரை நீக்கவும் உத்தரவாகும்.

வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள உங் களது பெயர், தகப்பனார்/தாயார்/கணவரது பெயர், முகவரி, வயது, ஆண்/பெண், வாக்காளர் அடை யாள அட்டை வரிசை எண் இவற்றில் ஏதாவது பிழை இருந்தால், அதை சரி செய்யவும் வழி உண்டு. படிவம் 8ல், திருத் தம் செய்யப்படவேண்டிய விவரத்தைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம்.


source : Mangayar malar Nov 2009.