|
பொன்னமராவதி - மயிலாப்பூர் சாலை சீரமைக்கப்படுமா? Aug 13, 11 |
|
முற்றிலும் சேதமடைந்துள்ள பொன்னமராவதி- மயிலாப்பூர் சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
பொன்னமராவதியிலிருந்து மயிலாப்பூர், மாந்தக்குடிப்பட்டி, புதூர் வழியாக துவரங்குறிச்சிக்குச் செல்லும் சாலையில், மாந்தக்குடிப்பட்டி வரை சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது.
இந்தச் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டியுள்ளது. இதனால், பயண நேரம் விரயமாவதுடன், எரிபொருள் செலவும் அதிகரிக்கிறது. மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், மழைக் காலங்களில் சாலைகளில் உள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்குவதால், ஆழம் தெரியாமல் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.
source ; dinamalar |
|
|
|
|
|