Nagaratharonline.com
 
நகரத்தார் பக்த நெறிமன்றம் சார்பில், தங்கத் தேர் இழுக்க பதிவு ரத்து  Aug 20, 11
 
திருப்பரங்குன்றம் கோயிலில் சாவி காணாமல் போனதால் தங்கத் தேர் இழுக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

இந்தக் கோவிலில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக தங்கத் தேர் இழுப்பது வழக்கம். இதற்கு ரூ. 2,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

நேற்று நகரத்தார் பக்த நெறிமன்றம் சார்பில், தங்கத் தேர் இழுக்க பதிவு செய்திருந்தனர். இதற்காக மாலை 6 மணிக்கு பக்தர்கள் வந்துவிட்ட 7மணிக்கு தங்கத் தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடக்க இருந்தது.

ஆனால், தங்கத் தேர் உள்ள அறை திறக்கப்படவில்லை. அதிகாரிகளும் கோவில் நிர்வாகிகளும் அங்கும் இங்கும் பரபரப்பாக ஓடினர். இதையடுத்து பக்தர்கள் கேட்டதற்கு, தேர் வைக்கப்பட்டுள்ள அறையின் சாவி தொலைந்து விட்டதாக தகவல் தந்தனர்.

இரவு 8.30 வரை சாவி கிடைக்கவில்லை. இதையடுத்து இன்னொரு நாளில் தேரை இழுக்க வருமாறு கூறி பக்தர்களை அனுப்பி வைத்தனர்.

source ; thatstamil