|
கோவை-திருப்பதி சிறப்பு ரயில் ரத்து Aug 27, 11 |
|
கோவை- திருப்பதி இடையே இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில்களை, தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
இது குறித்து கோவை ரயில்நிலைய மேலாளர் (பொறுப்பு) சின்ராஜ் கூறுகையில், ""கோவை-திருப்பதிக்கு 06065 மற்றும் 06066 என்ற ரயில்கள் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. செப்., மாதம் 1, 8, 15, 22, 29, அக்., 6, 13 ஆகிய தேதிகளில் இயக்கப்படுவதாக இருந்தது. இந்த ரயில்களுக்கு 10 சதவீதம் வரை தான் கூட்டம் இருக்கிறது. பயணிகளின் வருகை குறைவாக இருப்பதால், அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே, திருப்பதிக்கு இயங்கும் ரயில்களில் மாற்றம் இல்லை. வரும் புரட்டாசி மாதம் கூட்டம் அதிகரிப்பது குறித்து, குறிப்பிட்டு கூற இயலாது,'' என்றார்.
source : dinamalar |
|
|
|
|
|