|
சென்னை அபிராமி தியேட்டரில் படம் பார்க்க வீடு தேடி வரும் டாக்சி : Aug 28, 11 |
|
ரசிகர்களை தியேட்டருக்கு வந்து படம் பார்க்க வைக்க தியேட்டர் அதிபர்கள் பல்வேறு உத்திகளை கையாண்டு வருகிறது. அந்தவகையில் புதிய திட்டம் ஒன்றை துவங்கியிருக்கிறார் அபிராமி மெஹாமால் ராமநாதன்.
பெருகிவரும் டிராபிக் நெரிசல் கூட தியேட்டருக்கு மக்கள் வராமல் போக காரணமாக இருக்கலாம் என்று எண்ணிய அபிராமி ராமநாதனும், அவரது துணைவியார் நல்லம்மை ராமநாதனும் ஒரு முடிவு செய்திருக்கிறார்கள். வீட்டிலிருந்து 26476565, 26256565 என்ற எண்ணுக்கு போன் செய்தால் போதும். வீடு தேடி கால்டாக்சி வந்து உங்களை அழைத்துச் செல்லும்.
அபிராமி தியேட்டர் இருக்கும் புரசைவாக்கத்திலிருந்து, அடையார் பகுதிக்கு காரை வரவழைக்கிறோம் என்று வையுங்கள். தியேட்டரிலிருந்து அடையார் வரைக்கும் வருகிற தொகையையும் நாம் தர வேண்டியிருக்குமோ என்று அஞ்சவே தேவையில்லை. நீங்கள் காரில் ஏறி அமர்கிறபோது இருக்கிற மீட்டர்தான் கணக்கு. அதே மாதிரி திரும்ப வீட்டுக்கு வருவதற்கும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் திருமதி நல்லம்மை.
source : Dinamalar |
|
|
|
|
|