Nagaratharonline.com
 
மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை நிறுவனர்கள் சிலை திறப்பு  Aug 29, 11
 
பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியின் சன்மார்க்க சபை நிறுவனர்கள் வ.பழ.சா. பழனியப்பன்,வ.பழ.சா. அண்ணாமலையார் ஆகியோரின் சிலைகள் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சன்மார்க்க சபைத் தலைவர் ப.சா. சிங்காரம் தலைமை வகித்தார். சன்மார்க்க சபை செயலர் சித. ராமலிங்கம் முன்னிலை வகித்தார். கல்லூரிக் குழுச் செயலர் அ. சாமிநாதன் அறிமுகவுரையாற்றினார். சிலைகளைத் திறந்துவைத்து இந்திய சட்ட ஆணைய முன்னாள் தலைவரும், முன்னாள் நீதிபதியுமான அரு. லட்சுமணன் பேசியது:
நகரத்தார் கல்விக்கு தொண்டாற்றத் தொடங்கியது முதலில் மேலைச்சிவபுரியில் தான். பிறகு ஊர்தோறும் கல்விப் பணி தொடர்ந்தது. நகரத்தார் வாழும் இடத்தில் கோயில்,பள்ளி,ஊருணி கண்டிப்பாக இருக்கும். அந்த அளவு தர்மச் சிந்தனை உடையவர்கள் அவர்கள் என்றார் அவர்.

எம்எல்ஏவும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா பேசியது:
மதுரை தமிழ் சங்கத்தையடுத்து தோன்றிய ஐந்தாம் தமிழ் சங்கம் மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை. அது போல 1918-ல் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று முதல்முதலில் தீர்மானம் இயற்றியது இந்த நிறுவனம்தான் என்பது பெருமைக்குரியது.
மறைமலையடிகளைப் போல தனித் தமிழ் இயக்கத்தை இந்நிறுவனம் நடத்தியுள்ளது. தமிழ்த் தாத்தா உ.வே.சா மூன்று முறை இந்தக் கல்லூரிக்கு வந்துள்ளார் என்றார் அவர்.
கல்லூரிக் குழுத் தலைவர் சி. நாகப்பன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் தா. மணி நன்றி
கூறினார்.

source : Dinamani