|
சிவகங்கையில் கிராபைட் தொழில் பூங்கா அமைக்க அரசுக்கு பரிந்துரை: சட்டசபை மனுக்கள் குழு தகவல் Nov 18, 09 |
|
சிவகங்கையில் கிராபைட் தொழில் பூங்கா அமைக்க அரசுக்கு பரிந்துரை: சட்டசபை மனுக்கள் குழு தகவல்
சிவகங்கை: சிவகங்கையில் கிராபைட் தொழில் பூங்கா, தொழில் நுட்ப ஆலோசனை மையம் அமைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என சட்டசபை மனுக்கள் குழுவினர் தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டத் தில் கிராபைட் தொழிற் சாலை அமைக்க தேவையான கிராபைட் கற்கள் பெருமளவில் கிடைக் கின்றது.
இங்கு தோண்டி எடுக்கப்படும் கிராபைட் கற்கள் பிற மாநிலங்களுக்கு பவுடராக மாற்றம் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது. கிராபைட் தொழிற்சாலையில் தற் போது 200 பேர் பணிபுரிகின்றனர். இந்த தொழிலின் உப தொழிலை துவக்கினால் மாவட்டத் தில் மேலும் இரண்டாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். கிராபைட் தொழிற்சாலை அமைக்க பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசுக்கு கோரிக்கை தரப்பட்டது. நேற்று சிவகங்கை வந்த சட்டசபை மனுக்கள் குழு தலைவர் தங்கம் எம்.எல். ஏ.,விடம் சிவகங்கை எம்.எல்.ஏ., குணசேகரன், கிராபைட் ஆலையை விரிவுபடுத்த கோரி மனு அளித்தார்.
அதில், கிராபைட் ஆலையை பயன்படுத்தி உபதொழில்களை உருவாக்க கிராபைட் தொழிற் பூங்கா துவக்குவதற்கு அரசு பரிசீலிக்கவேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து மனுக்கள் குழுவினர் கிராபைட் ஆலையை ஆய்வு செய்த பின் நிருபர்களிடம், குழுவின் தலைவர் கூறுகையில், ""சிவகங்கையில் கிராபைட் தொழில் மூலமாக பலருக்கு நேரடியாக, மறைமுகமாக வேலை வாய்ப்பு கிடைக்கும். இங்கு, கிராபைட் தொழில் நுட்ப பூங்கா, ஆலோசனை மையம் அமைக்க அரசுக்கு பரிந்துரை செய்கிறோம்'' என்றார்.
Source: Dinamalar 18/11/09 |
|
|
|
|
|