|
மானாமதுரை: ப்ரத்யங்கிரா தேவி கோயிலில் அமாவாசை யாகம் Nov 19, 09 |
|
மானாமதுரை, நவ.17: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வேதியரேந்தல் விலக்கு பகுதியில் அமைந்துள்ள பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோயிலில் திங்கள்கிழமை இரவு கார்த்திகை மாத அமாவாசை யாகம் நடைபெற்றது.
உலக மக்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று வாழ வேண்டி நடந்த இந்த யாகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
யாகத்தில் பட்டுப் புடவைகள், மாலைகள், மிளகு, பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இடப்பட்டன. யாகத்தின் நிறைவாக பூர்ணாகுதி நடைபெற்று முடிந்ததும் பிரத்யங்கிரா தேவிக்கு தீப ஆராதனை நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ப்ரத்யங்கிரா வேத தர்ம டிரஸ்ட் நிர்வாகம் செய்திருந்தது.
அமாவாசை யாகத்தை முன்னிட்டு ப்ரத்யங்கிரா தேவி கோயிலுக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
Source: Dinamani 19/11/09 |
|
|
|
|
|