Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டையில் குரங்குகளால் பாதிப்பு  Sep 5, 11
 
நாட்டரசன்கோட்டையில் வீடு,பள்ளிகளில் புகுந்து சாப்பாடுகளை நாசம் செய்யும் குரங்குகளால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.சுற்றுலா, ஆன்மிக தலமாக நாட்டரசன்கோட்டை உள்ளது.இங்கு, ஏராளமான சுற்றுலா பயணிகள்,பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இங்குள்ள மரங்கள்,ஆட்கள் இல்லாத பெரிய வீடுகளில் 25க்கும் மேற்பட்ட குரங்குகள் வசிக்கின்றன. அவை பள்ளிகளுக்குள் புகுந்து மாணவர்கள் கொண்டு வரும் உணவு, வீடுகளில் சமையல் அறைகளுக்குள் புகுந்து உணவுகளை நாசம் செய்து விடுகின்றன. இதனால், மக்கள் அச்சத்தில் தவிக்கின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் கொண்டு வரும் உணவு பண்டங்களையுள் பறித்து விடுகின்றன. இதனால், பயணிகள் அச்சத்தில் தவிக்கின்றனர். வீடுகளில் உணவுகளை பாதுகாக்க முடியாமல் திணறி வருகின்றனர். குரங்குகளை பிடிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.பேரூராட்சி நிர்வாக அலுவலர் சத்தியநாதன் கூறுகையில்,"" வனத்துறைக்கு பல முறை மனு செய்தோம். தனியாக நாங்கள் பிடித்தால், குரங்கிற்கு 500 ரூபாய் வரை கேட்கின்றனர். இதற்கு நிதி ஆதாரம் இல்லை. மீண்டும் வனத்துறையிடம் வலியுறுத்தப்படும்,'' என்றார்.

source : Dinamalar