|
திருப்புத்தூர் - கல்லல் ரோடு திட்டம் முடக்கம் Sep 12, 11 |
|
திருப்புத்தூரில் இருந்து கல்லல் செல்லும் பயணிகள் பட்டமங்கலம், சொக்கநாதபுரம் விலக்கு வழியாக 23 கி.மீ., தூரம் செல்லவேண்டும். ஆலங்குடி வழியாகவும் செல்லலாம். இதற்கும் 23 கி.மீ., தூரமாகும். இதனால், பயணிகள் காலதாமதம் ஏற்பட்டு சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்த இரு வழிகளுக்கு மாற்றாக,வழி ஏற்படுத்தினால், பயணிகள் சுற்றிச்செல்லும் காலவிரையம் குறையும் என கணக்கிடப்பட்டது.
அதன்படி, திருப்புத்தூரில் இருந்து கண்டரமாணிக்கம், பொன்னாங்குடி விலக்கு, கள்ளிப்பட்டு, புரண்டி வழியே கல்லலுக்கு புதிய பாதை அமைப்பதென முடிவானது. இப்பாதை அமைந்தால் 5 கி.மீ., பயணதூரம் குறையும். காலவிரயம், எரிபொருள் விரயம் குறைவதுடன் கூடுதலாக கிராமங்களுக்கு பஸ் வசதி கிடைக்கும். இத்திட்டத்திற்காக முடிவு செய்து 15 ஆண்டுகளாகியும் பணிகள் துவங்காமல் கிடப்பில் உள்ளது. இப்பணியை விரைவுபடுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
source : Dinamalar |
|
|
|
|
|