Nagaratharonline.com
 
நாட்டரசன்கோட்டை : சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக்கிளை திறப்பு  Sep 13, 11
 
சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டை பகுதியில் சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளையை திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். பலருக்கு கல்விக் கடன், தனி நபர் கடன், மரக்கன்றுகள் ஆகியவற்றை வழங்கினார். பின்னர்
அவர் பேசியது:
நாட்டரசன்கோட்டை பல விஷயங்களுக்கு புகழ் பெற்றது. இங்கு கம்பனின் சமாதி உள்ளது. கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் உள்ளது. இங்கு இந்த வங்கி அமைந்திருப்பது பெருமை வாய்ந்தது.
இது சாதாரண வங்கியல்ல. 3821 கிளைகள் கொண்ட இந்தியாவின் 3-வது பெரிய வங்கி. இந்த வங்கி தொடங்கப்பட்டு இந்தாண்டு 100 ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழகத்தில் இது 183-வது கிளை. மகாத்மா காந்தி இந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தார். ரூ.3 லட்சத்து 21 ஆயிரம் கோடி வரவு செலவும், ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் வைப்புத் தொகையும், ஒரு லட்சத்து 26 ஆயிரம் கோடி ரூபாய் மொத்தம் கடனாகவும் வழங்கியுள்ள வங்கி இது.

source : Dinamani