|
காரைக்குடியில் சில்லரை நாணயம் வழங்கும் இயந்திரம் அறிமுகம் Sep 14, 11 |
|
தென்மாவட்டத்தில் முதன்முறையாக சில்லரை நாணயம் வழங்கும் இயந்திரம் காரைக்குடியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.வங்கிகளால், மக்களுக்கு தேவைப்படும் சில்லரை நாணயங்களை வழங்குவதில், சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக வர்த்தகர்கள் தங்களது வியாபாரத்திற்கு தேவையான சில்லரை நாணயங்களை பெறமுடியவில்லை. இதை தவிர்க்கும் பொருட்டு தென்மாவட்டத்திலேயே முதன் முறையாக காரைக்குடி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் சில்லரை நாணய பட்டுவாடா இயந்திரம் (காயின் டிஸ்பென்ஷரி மிஷின்) புதிதாக நிறுவப்பட உள்ளது. இதில், 5, 10, 20 ரூபாய் தாளுக்கு தேவையான சில்லரை நாணயங்கள் கிடைக்கும்.
இயந்திரத்தில் ஒன்று, இரண்டு, 5 ரூபாய் நாணயங்கள் கிடைக்கும். இதில், 20 ரூபாய்க்கு மேல் சில்லரை கிடைக்காது. இது குறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மண்டல மேலாளர் எம்.ராமதாஸ் கூறியதாவது: சில்லரை தட்டுப்பாட்டை போக்க, 3.25 லட்ச ரூபாயில் நாணயம் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட உள்ளது. இந்த இயந்திரத்தில் 1, 2 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் ஒரு லட்ச ரூபாய் வரை வைக்கப்படும். 5 மற்றும் 20 ரூபாய் நோட்டுக்களுக்கு மட்டுமே நாணயங்கள் பெறலாம், என்றார்.
source : Dinamalar |
|
|
|
|
|