Nagaratharonline.com
 
செப்.19 காரைக்குடி பகுதியில் மின்தடை  Sep 17, 11
 
காரைக்குடி, செப். 16: காரைக்குடி 110 கேவி உப மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், திங்கள்கிழமை (செப்டம்பர் 19) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி, தேவகோட்டை ரோடு, அரியக்குடி, பேயன்பட்டி, ஆறாவயல், செக்காலைக் கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என காரைக்குடி கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Source:Dinamalar